This Article is From Mar 30, 2019

பணி நீக்கம் செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் மோடியை எதிர்த்து போட்டி

பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் போட்டியிடுகிறார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் மோடியை எதிர்த்து போட்டி

தேஜ் பகதூர் வெளியிட்ட வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

Chandigarh:

எல்லை பாதுகாப்பு படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட வீரர் தேஜ் பகதூர் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக இருந்த அவர் கடந்த 2017-ல் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் வீரர்களுக்கு அளிக்கப்படும் உணவு மிக மோசமாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோ நாடு முழுவதும் வைரலானது. இதன்பின்னர் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறி, அவரை எல்லை பாதுகாப்பு படை பணி நீக்கம் செய்தது.

இந்த நிலையில் அவர் பிரதமர் மோடியை எதிர்த்து உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘'சுயேச்சை வேட்பாளராக பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறேன். பாதுகாப்பு படையில் இருக்கும் ஊழலை எதிர்த்து நான் போராடப் போகிறேன். இதற்காகத்தான் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்.''என்றார்.

.