This Article is From Jul 24, 2020

எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு: துணை முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம்!

தமிழக மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் புரட்சித்தலைவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

Advertisement
தமிழ்நாடு Posted by

எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு: துணை முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம்!

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு போர்த்தப்பட்ட சம்பவத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலையில் மர்மநபர்கள் சிலர் காவித்துண்டை போர்த்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

இதைத்தொடர்ந்து, போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அதிமுக தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 

இதனிடையே, இந்த விவகாரத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், தமிழக மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் புரட்சித்தலைவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

Advertisement

தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அரசினை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல், அண்மையில் கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பெரியார் சிலையின் மீது மர்மநபர்கள் காவிசாயத்தை பூசிச்சென்றனர். இந்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Advertisement
Advertisement