Read in English
This Article is From Oct 09, 2019

வருமான வீழ்ச்சி மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது : ஆய்வறிக்கை கூறும் தகவல்

“அதிக வருமானம் ஈட்டும் ஆண்டுகளில் நடுத்தர வயது இளைஞர்களின் மூளையின் ஆரோக்கியம் சிறப்பாக உள்ளதற்கான ஆதாரங்களை  எங்களின் ஆய்வு முடிவுகள் அளிக்கின்றன” என்ற ஹசரி கூறியுள்ளார்.

Advertisement
Jobs Edited by

ஒவ்வொரு பங்கேற்பாளரின் 1990 மற்றும் 2010க்கும் இடையில் வருமான மாற்றத்தின் சதவீதத்தையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

New York:

வருடாந்திரம் வருமான வீழ்ச்சியை எதிர்கொள்ளும் இளைஞர்கள் 25 சதவீதத்தினர் மூளையின் ஆரோக்கிய குறைவை எதிர்கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். 

நிலையற்ற வருமானம் மூளையின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறைவான அல்லது நிலையற்ற வருமானம் உள்ளவர்கள் சுகாதார வசதியின்றி  நீரிழிவு நோய்களை  சரிவர நிர்வகிக்காமல் இருக்கின்றனர். புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் போன்ற ஆரோக்கியமற்ற பழக்கவழங்களும் இதற்கு காரணமாகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“1980களின் முற்பகுதியில் இருந்து வருமான ஏற்ற இறக்கத்தினால் உடல் ஆரோக்கியத்தினால் பரவலான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன” என்று கொலம்பியா மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் தொற்று நோயியல் உதவி பேராசிரியர் அடினா ஜெக்கி அல் ஹசரி கூறினார். 

“அதிக வருமானம் ஈட்டும் ஆண்டுகளில் நடுத்தர வயது இளைஞர்களின் மூளையின் ஆரோக்கியம் சிறப்பாக உள்ளதற்கான ஆதாரங்களை  எங்களின் ஆய்வு முடிவுகள் அளிக்கின்றன” என்ற ஹசரி கூறியுள்ளார்.

Advertisement

ஆய்வின் தொடக்கத்தில் 23 முதல் 35 வயதுடைய 3,287 பேர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். பங்கேற்பாளர்கள் தங்களின் ஒவ்வொரு கால கட்ட வருமானத்தையும் தெரிவித்தனர். 1990 முதல் 2010 வரை வருமானம் குறித்த தகவல்களை தெரிவித்தனர்.

ஒவ்வொரு பங்கேற்பாளரும் 1990 மற்றும் 2010க்கும் இடையில் வருமான மாற்றத்தின் சதவீதத்தையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

Advertisement

வருமான வீழ்ச்சிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பங்கேற்பாளர்கள் மூன்று குழுக்களாக பிரித்தனர். வருமான வீழ்ச்சி இல்லாத 1,780 பேர்; முந்தைய அறிக்கையிடப்பட்ட வருமானத்திலிருந்து 25 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் வருமான வீழ்ச்சியை சந்தித்தவர்கள் 1,108பேர். 399 பேர் இரண்டு அல்லது மூன்று மடங்கு வருமான வீழ்ச்சியடைந்தவர்கள்.

அதிகப்படியான வருமான வீழ்ச்சியுடையவர்கள் பணிகளை முடிப்பதில் மோசமான செயல்திறனைக் கொண்டுள்ளனர். சராசரியாக 3.74 புள்ளிகள் அல்லது 2.8 சதவீதம் என்று மோசமான மதிப்பெண்களை பெற்றனர். 

Advertisement

ஆய்வாளர்கள் வருமான வீழ்ச்சியடையாதவர்களின் மூளையையும் அதிகளவு வருமான வீழ்ச்சியடைந்தவர்களின் மூளையையும் ஒப்பிட்டு பார்த்தனர். 

“வருமானத்தின் வீழ்ச்சி மூளை ஆரோக்கியத்தை  குறைக்கிறது என்பதை ஆய்வு நிரூபிக்கவில்லை. மூளையின் செயல்பாட்டிற்கு சமூகம் மற்றும் நிதிசார் காரணிகள் வகிக்கும் பங்கை ஆராய கூடுதல் ஆய்வுகளின் தேவையை இது வலுப்படுத்துகிறது” என்று நியூராலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement