பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மோடி இட்லி போஸ்டர்
Coimbatore: சேலத்தில் 10 ரூபாய்க்கு மோடி இட்லி வழங்கப்படும் என்று போஸ்டர்கள் ஒட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேலம் சேலம் டவுன், பழைய பேருந்து நிலையம் , சின்ன கடை வீதி, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மோடி இட்லி என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், பாஜக பிரமுகர் மஹேஸ் என்பவர் வெறும் 10 ரூபாய்க்கு 4 இட்லிகள் வழங்கப்படும் என்று வாசகம் பொறித்துள்ளார். மேலும், அதிநவீன் கருவிகள், சுகாதாரமானது, ஆரோக்கயமானது, சுவையானது-தரமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சேலம் என்பது முதல்வர் பழனசாமியின் சொந்த மாவட்டமாகும். அங்கு பாஜகவினர் சுமார் 22 கடைகள் திறந்து, மோடி இட்லி என்ற பெயரில் விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.
மோடியின் பெயரில் 10 ரூபாய்க்கு 4 இட்லி என்ற போஸ்டரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)