This Article is From Mar 30, 2019

சேலத்தில் மகளுடன் சேர்ந்து பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை!!

கோவை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சேலத்தில் மகளுடன் சேர்ந்து பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை!!

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Coimbatore:

சேலத்தில் மகளுடன் சேர்ந்த பெற்றோர் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்கொலை செய்து கொண்டவர்களின் மகன் தனது பாட்டி வீட்டில் இரவு தங்கியுள்ளார். விடிந்ததும், வீட்டிற்கு வந்து அவர் கதவை தட்டியிருக்கிறார். யாரும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் உள்ளவர்களிடம் விஷயத்தை தெரிவித்திருக்கிறார்.

இதுசம்பந்தமாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்தனர். பதில் ஏதும் வராததால் கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்க்கப்பட்டது.

இதில் 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதற்கான காரணம் என்னவென்று உறுதிப்படுத்தப்படவில்லை.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.