This Article is From May 23, 2020

தமிழகத்தில் சென்னையை தவிர பிற அனைத்து மாவட்டங்களின் நகரங்களிலும் சலூன் கடைகள் திறக்க அனுமதி!

இந்நிலையில் தற்போது, தமிழகத்தின் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் (கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர) சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி கடைகள் திற்ந்திருக்கலாம் என்று அரசு அனுமதியளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு முடக்க நடவடிக்கை மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் தொடரச்சியாக முடிதிருத்தும் சலூன் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் இந்த தொழிலை நம்பியிருக்கும் லட்சக்ணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைந்தனர். இந்நிலையில் சமீபத்தில், தமிழகத்தின் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் மட்டும் கடைகளை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.

.