Read in English
This Article is From Jul 26, 2019

கார்கில் போர் வெற்றி தினம்: இந்தியாவை பாதுகாத்தவர்களை தலைவணங்குவோம்: ராம்நாத் கோவிந்த்

1999-ம் ஆண்டு கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

ஜம்மு-காஷ்மீரில் உள்ள நினைவிடத்திற்கு நேரில் சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்த உள்ளார்.

New Delhi:

கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பதிவில், 1999-ம் ஆண்டு கார்கில் போரில் ஆயுதப்படைகள் தீரமுடன் போரிட்டு வென்றனர். இந்தியாவை பாதுகாத்தவர்களின் வீரத்துக்கும், துணிச்சலுக்கு தலைவணங்குவோம். ஜெய்ஹிந்த் என்று அவர் தெரிவித்துள்ளார்.  

தொடர்ந்து, கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளார். 

கார்கில் போர் 1999ல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், நடந்த போராகும். இப்போரானது, மிக உயர்ந்த மலைத்தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு நடந்த போருக்கு சிறந்த உதாரணமாகும். இதுவரை இந்த போர் மட்டுமே, அணு ஆயுத சக்தியுடைய நாடுகள் இரண்டுக்கிடையில் நடந்த நேரடிப் போராகும். 

Advertisement

சிறப்பு வாய்ந்த இந்த கார்கில் போரில் இந்தியா 500க்கும் மேற்பட்ட வீரர்களை தியாகம் செய்தது. 1,800க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த போர் முடிவுக்கு வந்த ஜூலை 26-ம் தேதியை கார்கில் வெற்றி தினமாக ஆண்டுதோறும் இந்தியா கொண்டாடி வருகிறது. 

Advertisement