This Article is From May 10, 2019

''சாம் பித்ரோடாவின் கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல'' - காங்கிரஸ் அறிக்கை!!

1984-ல் இந்திரா காந்தியின் படுகொலையை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. இந்த விவகாரத்தை நானாவதி கமிஷன் விசாரித்தது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பித்ரோடா கூறியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

''சாம் பித்ரோடாவின் கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல'' - காங்கிரஸ் அறிக்கை!!

பித்ரோடாவின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு வெளியிட்டுள்ளது.

1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பித்தோடா கூறியது கட்சியின் நிலைப்பாடு அல்ல என்று காங்கிரஸ் மறுப்பு வெளியிட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்தின்போது, 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க நானாவதி கமிஷன் அமைக்கப்பட்டது.

நானாவதி கமிஷன் தனது விசாரணை அறிக்கையில், கலவரம் நடந்து கொண்டிருந்தபோது சீக்கியர்களை கொல்லுங்கள் என்ற உத்தரவு ராஜிவ் காந்தியின் அலுவலகத்தில் இருந்து வந்ததாக பதிவு செய்திருக்கிறது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்த சாம் பித்ரோடா, 'நடந்தது நடந்து விட்டது. 1984-ல் நடந்தது குறித்து இப்போது ஏன் கேட்கிறீர்கள்?. கடந்த 5 ஆண்டுகளில் (மோடி ஆட்சியில்) என்ன நடந்ததோ அதைப் பற்றி பேசுங்கள்' என்று கூறியிருந்தார். அவர் அலட்சியமாக பதில் அளித்து விட்டார் என்று பாஜக கடுமையாக விமர்சித்தது.

சாம் பித்ரோடாவின் கருத்து காங்கிரசுக்கு நெருக்கடி அளித்த நிலையில், தனி நபரின் கருத்துகள் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

தலைவர்கள் கருத்து தெரிவிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்திற்கும், 2002-ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 

.