This Article is From Apr 27, 2019

குழந்தை பிறப்புக்கு பின் அடையாளம் தெரியாமல் ஆகிவிட்டேன்: ஃபீல் பண்ணும் சமீரா ரெட்டி

Sameera Reddy said: வீட்டை விட்டு வெளியே சென்றால் இது சமீராரெட்டி தானா? என்ன ஆச்சு உங்களுக்கு? என்று தான் கேட்கிறார்கள்

குழந்தை பிறப்புக்கு பின் அடையாளம் தெரியாமல் ஆகிவிட்டேன்: ஃபீல் பண்ணும் சமீரா ரெட்டி

சமீரா ரெட்டி பகிர்ந்த புகைப்படம். (Image courtesy: Instagram)

ஹைலைட்ஸ்

  • நான் தொலைந்து போய்விட்டேன் குழப்பமாக இருக்கிறேன்: சமீரா ரெட்டி
  • சமீரா ரெட்டி இந்த நேரத்தில் தன்னை நன்றாக தயார் படுத்திக் கொள்ள வேண்டும்
  • நான் எல்லா நேரமும் கவர்ச்சியாக இருக்க விரும்பவில்லை
New Delhi:

நடிகை சமீரா ரெட்டி கணவர் அக்‌ஷய் வர்தாவுடன் இணைந்து இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். குழந்தை பிறப்புக்குப் பின் நான் முற்றிலும் அடையாளம் தெரியாமல் போய்விட்டேன் என்று ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். பாலிவுட் நடிகையான சமீரா ரெட்டி தமிழில் வெடி படத்திலும் ஹிந்தியில் ரேஸ், டாக்ஸி நம்பர் 9211 மற்றும் ப்ளான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தான் 102 கிலோ எடையில் இருப்பதாகவும் மன அழுத்தத்துடன் இருப்பதாகவும் ஆனால், தான் ஒரு நல்ல தாய் என்று தெரிவித்துள்ளார்.

ஐஏஎன் எஸிடம் தெரிவித்த போது ”நான் 32 கிலோ எடை அதிகரித்துள்ளேன். மொத்தமாக சீர்குலைந்துவிட்டேன். வீட்டை விட்டு வெளியே சென்றால் இது சமீராரெட்டி தானா? என்ன ஆச்சு உங்களுக்கு? என்று தான் கேட்கிறார்கள். இந்த கேள்வி என்னை துயரத்தில் ஆழ்த்துகிறது என்று கூறினார்.

குழந்தை பிறப்புக்கு 6 மாதத்திற்கு முன்பிருந்தே தனக்கு முடி உதிர்வு சிக்கல் ஏற்பட்டது. கர்ப்பமாக இருந்ததால் எந்தவொன்றும் செய்யமுடியவில்லை என்று தெரிவித்தார்.

சமீரா ரெட்டி “பழைய படி திரும்ப தான் மிகவும் கடினமாக உழைத்து வருவதாகவும், தெரபி ஆகியவை எடுத்து வருகிறேன். நான் நடிகையாக இருந்தேன் தற்போது மனைவியாகவும் தாயாகவும் இருந்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் “நடிகர் நடிகைகளுக்கு சமூக அழுத்தம் அதிகமாகவுள்ளது. எப்போதும் மக்களின் பார்வைக்கு விரும்பும் விதத்திலிருக்க வற்புறுத்தப்படுகிறார்கள். குழந்தை பிறப்புக்கு பின்பும் எப்படி உடலை பராமரிக்கிறாள் என்ற பாராட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.

(With inputs from IANS)



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.