Read in English
This Article is From May 21, 2019

ரூ. 1 கோடி மதிப்பிலான மண்ணுளி பாம்புகள் பறிமுதல்!

புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி மண்ணுளி பாம்புகளுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

Advertisement
இந்தியா Edited by

மருத்துவம், மற்றும் அழகுப்பொருட்கள் தயாரிப்பிலும் மண்ணுளி பாம்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

Palghar:

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மண்ணுளி பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Sand Boa எனப்படும் மண்ணுளிப் பாம்புகளுக்கு புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாம்பில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்று நோயை எதிர்க்கும் தன்மை கொண்டது என உறுதிபடுத்தப்படாத தகவல் பரவியுள்ளது.

இதன் காரணமாக அதிக எடை கொண்ட மண்ணுளி பாம்புகள் பல லட்சம் ரூபாய்க்கு கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மண்ணுளி பாம்புகளை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவம், அழகுசாதன தயாரிப்பு உள்ளிட்டவைகளுக்கும் மண்ணுளி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு சர்வதேச சந்தையில் டிமாண்ட் அதிகம் என்பதால் அவை அதிக விலைக்கு விற்பனையாகின்றன.

Advertisement
Advertisement