Election 2019: பொதுக்கூட்ட மேடைக்கு கமல் வந்தபோது செருப்பு வீசப்பட்டுள்ளது.
மதுரையில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமலை நோக்கி செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செருப்பு வீசிய நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாதம் குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பிரச்னை பெரிதானதை தொடர்ந்து கமலின் வீடு மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய கமல் மதுரைக்கு வந்தார்.
அவர் மேடையை நோக்கி சென்றபோது, அவரை நோக்கி செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் செருப்பு வீசிய நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.