This Article is From Jun 07, 2018

ஓய்வு நேரத்தில் இலவச டியூசன்: ஜம்மு ஐபிஎஸ் அதிகாரிக்குக் குவியும் பாராட்டுகள்!

தனது அலுவலக வேலை முடிந்த பின்னரும் காலையில் தனது அலுவலகப் பணி தொடங்கும் முன்னரும் அப்பகுதியைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார்

ஓய்வு நேரத்தில் இலவச டியூசன்: ஜம்மு ஐபிஎஸ் அதிகாரிக்குக் குவியும் பாராட்டுகள்!

Sandeep Chaudhary has started 'operation dreams' with an aim to see students get past academic hurdles

ஹைலைட்ஸ்

  • சந்தீப் சவுத்ரி ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரியான
  • ஓய்வு நேரத்தில் இலவச டியூஷன் நடத்துகிறார்
  • ஐஏஎஸ் - ஐபிஎஸ் தேர்வு எழுதுபவர்களுக்கும் சிறப்பு வகுப்பு
Jammu: ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் சவுத்ரி தனது ஓய்சு நேரத்தில் வசதி வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு பள்ளி பாடம் எடுப்பது, ஐஏஎஸ் - ஐபிஎஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுப்பது என அசத்தி வருகிறார்.

தென் ஜம்முவில் சூப்பரிண்டண்ட் அதிகாரியாகப் பணியாற்றி வரும் சந்தீப் ஐபிஎஸ், 2012 ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டவர். தனது அலுவலக வேலை முடிந்த பின்னரும் காலையில் தனது அலுவலகப் பணி தொடங்கும் முன்னரும் அப்பகுதியைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார். ஆனால், சில நாள்களிலேயே அந்த எண்ணிக்கை 150 மாணவர்களாக வளர்ந்தது. சிவில் சர்வீஸ் தேர்வுகள், வங்கிப் பணித் தேர்வுகள், காவல்துறை பணியாளர் தேர்வுகள் எனப் பள்ளித் தேர்வுகளில் இருந்து அரசுப் பணித் தேர்வுகள் வரையில் அனைத்துக்கும் மாணவர்கள் சந்தீப்பைத் தான் தேடி வருகின்றனர்.

முதலில் தனது வீட்டின் அருகில் பாடம் எடுத்து வந்த சந்தீப், மாணவர்கள் அதிகமாக வரத் தொடங்கிய உடன் தனது அலுவலகம் அருகே நல்ல எண்ணம் கொண்ட ஒருவர் வழங்கிய இலவச இடத்தில் தனது வகுப்புகளை எடுக்கத் தொடங்கினார். சந்தீப்பின் செயலைப் பாரட்டிய நண்பர்கள், அலுவலக அதிகாரிகள் என அனைவரும் சந்தீப்பின் செயலுக்கு அவரவருக்கு முடிந்த வரையில் உதவி செய்து வருகின்றனர்.

எந்த ஒரு கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல்தான் ஐபிஎஸ் தேர்வு ஆகியுள்ளார் சந்தீப். தனது பயணம் குறித்து கூறுகையில், “நான் இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் பிஏ மற்றும் எம்ஏ படிப்புகளை நிறைவு செய்தேன். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதலில் முழு நேர இளங்கலைப் படிப்புக்கு விண்ணப்பித்தேன். ஊடகவியல் துறையில் விண்ணப்பித்தேன். ஆனால், சில காரணங்களால் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியவில்லை.

அதன் பின்னர் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முடித்த பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வுகள் குறித்து நண்பர்கள் மற்றும் கல்லூரி சீனியர்கள் மூலம் தெரிந்துகொண்டு தயார் ஆனேன். அதன் பின்னர் 2012-ம் ஆண்டு பணியில் சேர்ந்து ஜம்முவில் பணியாற்றி வருகிறேன்” எனக் கூறினார்.

இங்கு பயிலும் மாணவர்கள் அனைவரும் சந்தீப்புக்கு தங்களது தேர்ச்சி விகிதம் மூலம் நன்றி கூறி வருகின்றனர். சந்தீப் கோச்சிங் சென்டரில் படித்து வசதி இல்லாத மாணவர்கள் பலரும் தற்போது நல்ல அரசுப் பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.
.