Read in English
This Article is From May 29, 2019

உலக மாதவிடாய் தினம்: சென்னை அரசு மருத்துவமனையில் சானிடரி நாப்கின் இயந்திரம்!

இயந்திரத்தைப் பயன்பாட்டுக்கு ஆரம்பித்து வைக்கும் போது, மாதவிடாய் குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. 

Advertisement
தமிழ்நாடு Edited by

அந்த இயந்திரத்தில் இருந்து பெண்கள், 5 ரூபாய்க்கு சானிடரி நாப்கின்களை எடுத்துக் கொள்ளலாம். 

Chennai:

உலக மாதவிடாய் தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சானிடரி நாப்கின் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. 

அந்த இயந்திரத்தில் இருந்து பெண்கள், 5 ரூபாய்க்கு சானிடரி நாப்கின்களை எடுத்துக் கொள்ளலாம். 

சானிடரி நாப்கின் இயந்திரப் பயன்பாட்டை ஆரம்பித்து வைக்கும் போது தமிழக சமூக நலத் துறை அமைச்சர் வி.சரோஜா மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர். 

இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழக அரசு ஒரு நாளைக்கு சுமார் 60 கோடி ரூபாய் செலவழித்து இலவச சானிடரி நாப்கின்களை வழங்கி வருகிறது. இது குறித்த விழிப்புணர்வு மாநிலம் முழுவதும் நல்ல முறையில் இருக்கிறது. ஆயினும், நாங்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

Advertisement

இயந்திரத்தைப் பயன்பாட்டுக்கு ஆரம்பித்து வைக்கும் போது, மாதவிடாய் குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. 
 
Advertisement