This Article is From Jul 29, 2019

“கே.ஜி.எஃப் 2” படத்தில் இணைந்த சஞ்சய் தத்!!!

அவர் யாரையெல்லாம் எதிர்கொள்ள இருக்கிறார் என்பதை இரண்டாம் பாகமாக எடுத்து வருகிறார் இயக்குநர்

Advertisement
Entertainment Written by

Highlights

  • சஞ்சை டுட் இப்படத்தில் இணைந்துள்ளார்
  • கடந்த ஆண்டு இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூனறு மொரிகளில் வெளியானது
  • தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இப்படம்

கடந்த ஆண்டு  யாஷ் நடிப்பில் தெலுங்கில் உருவான ‘கே.ஜி.எஃப்' திரைப்படம் தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஹிட் அடித்தது. இதனை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் படக்குழு இறங்கியது.

இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்க நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் வில்லனாக சஞ்சய் தத் தற்போது இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தின் முதல் பாகத்தில் தங்கச்சுரங்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த மக்களை மீட்டு தங்கச்சுரங்கத்தை தன்னுடைய கட்டுபாட்டிற்கு கொண்டு வருகிறார் யாஷ். அதன் பின் அவர் மிகப்பெரிய டானாக எவ்வாறு மாறினார், அவதற்காக அவர் சந்தித்த போராட்டங்கள் என்ன, அவர் யாரையெல்லாம் எதிர்கொள்ள இருக்கிறார் என்பதை இரண்டாம் பாகமாக எடுத்து வருகிறார் இயக்குநர். முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement