हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 20, 2019

சிறைக்கைதி மரண வழக்கில் குஜராத் முன்னாள் போலிஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு ஆயுள் தண்டனை!!

சஞ்சீவ் பட்டுடன் இன்னும் 6 போலீசாருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு 30 ஆண்டுகளுக்கு முந்தையது.

Advertisement
இந்தியா Edited by (with inputs from PTI)

1990- ஜாம் நகர் துணை எஸ்.பி.யாக சஞ்சீவ் பட் இருந்தபோது சம்பவம் நடந்தது.

Jamnagar, Gujarat:

30 ஆண்டுகளுக்கு முந்தைய சிறைக்கைதி மரண வழக்கில் குஜராத் முன்னாள் போலிஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருக்கு எதிராக சஞ்சீவ் பட் தொடர்ந்து செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 1989-ல் நடந்த சம்பவத்தில் தொடர்புடைய சஞ்சீவ் பட்டிற்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது குஜராத் மாநிலம் ஜாம் நகர் மாவட்டத்தில் துணை எஸ்.பி.யாக சஞ்சீவ் பொறுப்பில் இருந்தார். அந்த சமயத்தில் ஜாம் ஜோத்பூர் நகரில் கலவரம் வெடித்தது. 

இதுதொடர்பாக சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கிளல் ஒருவரான பிரபுதாஸ் வைஷானி விடுதலைக்கு பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதற்கு சிறையில் அவர் இருந்தபோது சஞ்சீவ் பட் மற்றும் போலீசார் நடத்திய தாக்கதலே காரணம் என்று, பிரபுதாசின் சகோதரர் வழக்கு தொடர்ந்தார். 

Advertisement

இந்த வழக்கை விசாரித்த ஜாம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம் சஞ்சீவ் பட்டிற்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோன்று வழக்கில் தொடர்புடைய மற்ற 6 போலீசாருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 

இந்த வழக்கு ஒருபுறம் இருக்க கடந்த 2011-ல் கடமையை மீறியது, அரசு வாகனத்தை தவறாக பயன்படுத்தியது போன்ற புகாரின்பேரில் சஞ்சீவ் பட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் கடந்த 2015 ஆகஸ்டில் பணியில் இருந்தே நீக்கப்பட்டார். 

Advertisement
Advertisement