ஜிம்முக்கு சென்று விட்டு திரும்பும் நடிகை சாரா அலி கான்.
ஹைலைட்ஸ்
- இந்தியில் ஹிட்டான சிம்பா படத்தில் நடித்தவர் சாரா அலி கான்
- பிரபல நடிகர் சைப் அலி கானின் மகள்தான் இந்த சாரா.
- 2018-ல் வெளிவந்த கேதார்நாத் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்
New Delhi: பிரபல நடிகை சாரா அலி கானிடம் ரசிகர் ஒருவர் எல்லை மீறி நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த அசம்பாவிதத்தை சாரா இன்று மதியம் எதிர்கொண்டார். 24 வயதாகும் அவர், ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு காரை விட்டு வெளியே இறங்கினார்.
ரசிகர்கள் ஒவ்வொருவராக அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அவர்களில் ஒருவர் சாராவின் கையை பிடித்து முத்தம் கொடுத்தார். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் சாரா பின்னோக்கிச் செல்ல, அவரது பாதுகாவலர்கள் முத்தம் கொடுத்த ரசிகரை அடித்து விரட்டினர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை சாரா அலி கான் தனது புத்தாண்டை மாலத்தீவில் கொண்டாடினார். அவருடன் சகோதரர் இப்ராகிம் அலி கான், தாயார் அம்ரிதா சிங் ஆகியோர் உடன் சென்றனர். தனது மாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு சில நாட்களுக்கு முன்னர்தான் சாரா மும்பை திரும்பினார். அவரது மாலத் தீவு புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டன.
:
சாராவுக்கு ஆழ் கடல் நீச்சல் தெரியும். இதனை வெளிப்படுத்தும் வகையில் அவர் நீச்சல் அடிக்கும் வீடியோவை கடந்த திங்களன்று இன்ஸ்டாவில் அவர் பதிவு செய்திருந்தார்.
:
பிரபல இந்தி நடிகர் சைப் அலி கான் மற்றும் அம்ரிதா சிங்கின் மகள்தான் இந்த சாரா அலி கான். அவர் கடந்த 2018-ல் வெளியான கேதார் நாத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தி திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதே ஆண்டில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக சிம்பா என்ற படத்திலும் அவர் நடித்தார்.
அடுத்ததாக வருன் தவானுக்கு ஜோடியாக டேவிட் தவான் இயக்கும் கூலி நம்பர் ஒன் படத்தில் அவர் நடித்து வருகிறார். லவ் ஆஜ் கல் என்ற திரைப்படத்தின் ரீ மேக்கிலும் சாராதான் ஹீரோயின். இந்த திரைப்படத்தை இம்தியாஸ் அலி இயக்க அதில் கார்த்திக் ஆர்யன், ரன்தீப் ஹூடா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.