This Article is From Jan 21, 2019

சிறையில் சொகுசு வசதிகள் வழங்கியது உண்மையே! - விசாரணையில் திடுக் தகவல்கள்!

சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வருகிறார்கள் என்பதும் அவர்கள் நேரடியாக சசிகலா அறைக்கு சென்றே 3-4 மணி நேரத்திற்கும் மேலாக இருந்துள்ளனர் என்பதும் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது

சிறையில் சொகுசு வசதிகள் வழங்கியது உண்மையே! - விசாரணையில் திடுக் தகவல்கள்!

சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டதும், நீண்ட நேரம் பார்வையாளர்கள் அவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

Bengaluru:

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், சிறையில் உள்ள சசிகலாவுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பது தற்போது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கூறும்போது, சசிகலாவுக்கு சிறையில் 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறையில் எந்த கைதிகளுக்கும் சமைக்க அனுமதி கிடையாது, அப்படியிருக்க சசிகலாவுக்கு சமையல் அறை மற்றும் சமைப்பதற்கு ஒரு பெண் கைதியும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறை அலுவலர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் பெரும் கூட்டமாக வருவதும், நேரடியாக அவரது அறைக்கு சென்று அவருடன் பேசுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

முன்னதாக, சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்ய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும், சிறை விதிகளை மீறி சசிகலாவுக்கு 4 விசே‌ஷ அறைகள் ஒதுக்கப்பட்டதும், அவர்களுக்கு தனி சமையலறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததும், மற்ற கைதிகளுக்கு அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை விட சசிகலாவுக்கு அதிக அளவிலான பார்வையாளர்களை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது போன்ற விதி மீறல்கள் நடந்ததாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விணய்குமார் தலைமையில் உயர்மட்டகுழுவை கர்நாடக அரசு நியமித்தது. இதைத் தொடர்ந்து அந்த குழு இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிக்கை சமர்பித்திருந்தது. அந்த அறிக்கையின் தகவல்களே தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

.