தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் (Jayalalitha) நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா.
New Delhi: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவுக்குச் (Sasikala) சொந்தமான சுமார் 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித் துறை (IT) முடக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. பினாமி சட்டத்திற்குக் கீழ் வருமான வரித் துறை இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிகிறது.
பல்வேறு பெயர்களில் சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பில், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் (Jayalalitha) நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவர், பெங்களூருவில் இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் பரோலில் வெளிவரக்கூடும் என்றும் ஒரு செய்தி உளவுகிறது.