சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கிளை சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவமானது, அமெரிக்காவில் உயிரிழந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டுடன் ஒப்பிட்டு பேசப்பட்டது. சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் சேலத்தில் சர்வதேச கால்நடை பூங்காவின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நீதிமன்ற அனுமதி பெற்று தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்.“ என தெரிவித்துள்ளார்.
மேலும், “காவல்துறையினருக்கு, பொதுமக்கள், வியாபாரிகள் போன்றவர்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.