This Article is From Mar 22, 2019

சாத்தூர் விவகாரம் :''எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டவரின் குழந்தைக்கு பாதிப்பு இல்லை''

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்ட்ட சாத்தூர் பெண்ணுக்கு கடந்த ஜனவரி 17-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தாயாருக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டிருந்ததால், குழந்தைக்கும் பாதிப்பு இருக்கும் என்று முதலில் கருதப்பட்டது.

Advertisement
தமிழ்நாடு Posted by

சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு, மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சியால் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவம் பலரது மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் அளித்த பேட்டியில், எய்ட்ஸ் பாதிப்பு குழந்தைக்கு இல்லை என்று அறிவித்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றும், தனக்கும், தனது குழந்தைக்கும் பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றி என கண்ணீர் மல்க கூறினார். 

சாத்தூர் பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து அவரது சிசுவுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிகிச்சைகள் வழங்கப்பட்டன. 

கடந்த ஜனவரி 17-ம்தேதி குழந்தை பிறந்த நிலையில் எச்.ஐ.வி. பாதிப்பு குறித்து குழந்தையிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அடுத்த கட்ட சோதனையிலும் எந்த சிக்கலும் குழந்தைக்கு வராது என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 23 வயது நிறைமாத கர்ப்பிணிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின்போது எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்டது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கர்ப்பிணி உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த நிலையில் மருத்துவர்களின் கடும் முயற்சியால் கர்ப்பிணியிடம் இருந்து எச்.ஐ.வி. பாதிப்பு அவரது குழந்தைக்கு பரவுவது தவிர்க்கப்பட்டுள்ளது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement