“இந்திய அரசாங்கம் ஒருபோதும் துப்பாக்கியின் முன் பணியாது”என்றும் கூறினார்.
Srinagar: ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் பயங்கரவாதிகள் அப்பாவி மக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களை சுட்டுக் கொல்வதை விட ஊழல் செய்த அரசியல்வாதிகளை குறி வைக்கலாம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
“துப்பாக்கிகளைத் தூக்கியவர்கள் தன் சொந்த மக்களையும் பாதுகாப்பு அதிகாரிகளையும் சிறப்பு காவல்துறை அதிகாரிகளையும் கொல்கிறார்கள். நீங்கள் ஏன் அவர்களைக் கொல்கிறீர்கள்? காஷ்மீரின் செல்வத்தை கொள்ளையடித்தவர்களைக் கொல்லுங்கள். அவர்களில் யாரேனும் ஒருவரை கொலை செய்தீர்களா?" என்று கார்கிலில் நடந்த நிகழ்ச்சியில் மாலிக் பேசினார்.
காஷ்மீரை ஆண்ட அரசியல் குடும்பங்கள் பொது பணத்தை கொள்ளையடிப்பதன் மூலம் உலகம் முழுவதும் சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் “இந்திய அரசாங்கம் ஒருபோதும் துப்பாக்கியின் முன் பணியாது”என்றும் கூறினார்.
ஆளுநர் பெரும்பாலும் காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் ஊழல் செய்ததாகவும், தேர்தல்களில் வாக்களிப்பு வீதம் குறைவாக இருப்பதால் பிரதிநிதித்துவம் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தனக்கு அதிகாரம் இருந்தால் ஊழல்வாதிகளை சிறையில் அடைத்திருப்பேன் என்றும் கூறினார்.
“காஷ்மீரில் ஆட்சி செய்த பெரிய குடும்பங்களுக்கு வரம்பற்ற செல்வம் கிடைத்துள்ளது. அவர்களுக்கு ஶ்ரீநகரில் ஒரு வீடு, டெல்லி, துபாய். லண்டன் மற்றும் பிற இடங்களில் ஒரு வீடு உள்ளது. அவர்கள் பெரிய ஹோட்டல்களின் பங்குதாரர்கள்” என்று அவர் கூறினார்.
இந்த அறிக்கைக்கு கடுமையாக ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா கவர்னரைத் கண்டித்து ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
“அரசியலமைப்பில் பதவியை வகிக்கும் ஒரு பொறுப்புள்ள மனிதர், ஊழல் செய்தவர்கள் என்று கருதப்படும் அரசியல்வாதிகளை கொல்லும் படி தீவிரவாதிகளிடம் கூறுகிறார். சட்டவிரோதமான கொலைகள் மற்றும் கங்காரு நீதிமன்றங்களை அனுமதிப்பதற்கு முன்பு இந்த நாட்களில் டெல்லியில் அந்த நபர் தனது சொந்த நற்பெயர் பற்றி என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.