பெண்ணியக் கருத்துக்கள் தண்டனைக்குரிய குற்றங்களே என்று கூறப்பட்டுள்ளது.
சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் பலரும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் இஸ்லாமிய நாடான சவுதியில் வெளிநாட்டினரை ஈர்க்கும் வகையில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பெண்ணியக் கருத்துக்கள் தண்டனைக்குரிய குற்றங்களே என்று கூறப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பெண்ணியம், ஓரினச்சேர்க்கை மற்றும் நாத்திகம் குறித்த கருத்துக்கள் அனைத்தும் தண்டனைக்குறிய தீவிரவாதக் கருத்துக்களே என்று கூறப்பட்டுள்ளது.
அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களை தொடர்ந்து சவுதி அரேபிய அரசு கைது செய்து வருகிறது. அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறிய பல பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு கருத்து சுதந்திரம் இல்லாத சூழலையே இது காட்டுகிறது.
எந்த விவகாரத்திலும் அரசின் முடிவே இறுதியானது என்ற கொள்கையை கொண்டதாக சவுதி அரேபியா விளங்கி வருகிறது. பெண்ணியம், ஓரினச்சேர்க்கை மற்றும் நாத்திகம் போன்ற செயல்பாடுகளை ஆதரித்த கட்சி இயக்கங்களுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.