हिंदी में पढ़ें Read in English
This Article is From Feb 12, 2019

5 ட்ரக்குகளில் பாகிஸ்தான் வந்தடைந்த சவுதி இளவரசரின் உடைமைகள்!

சவுதி இளவரசருக்காக கொண்டு வரப்பட்ட பொருள்களில் உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் பர்னிச்சர்கள் அடங்கும். இவை 5 ட்ரக்குகளில் வந்துள்ளதாக 'டான் செய்திகள்' தெரிவித்துள்ளது.

Advertisement
உலகம்

இளவரசர், பிரதமர் மாளிகையிலேயே தங்குவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது சொந்த தேவைக்கான பொருள்கள் அனைத்தும் 5 ட்ரக்குகள் மூலமாக இஸ்தான்புல் வந்து சேர்ந்தன. இந்த சுற்றுப்பயணத்தில் பல மில்லியன் டாலர் முதலீடுகள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் முகமது பின் சல்மானின் வருகை உறுதியாகியுள்ள நிலையில் என்ன தேதியில் வருகிறார் என்ற தகவல்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தெரிவிக்கப்படவில்லை.

அவருக்காக கொண்டு வரப்பட்ட பொருள்களில் உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் பர்னிச்சர்கள் அடங்கும். இவை 5 ட்ரக்குகளில் வந்துள்ளதாக 'டான் செய்திகள்' தெரிவித்துள்ளது.

Advertisement

அவரது பாதுகாப்பு படையினரும், சவுதி மீடியாக்களும் அவரது வருகைக்கு முன் பாகிஸ்தான் வந்தடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இளவரசராக பதவியேற்று பாகிஸ்தானுக்கு முகமது பின் சல்மான் வருவது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு ஏமன் பிரச்னை நேரத்தில் பாதுகாப்பு அமைச்சராக இங்கு வந்திருக்கிறார்.

Advertisement

இளவரசர், பிரதமர் மாளிகையிலேயே தங்குவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இஸ்தான்புல்லில் உள்ள இரண்டு பெரிய ஹோட்டலின் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த பயணத்தில் இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ராணுவ அதிகாரிகளை சந்திப்பார் என்று கூறபட்டுள்ளது.

Advertisement