Read in English
This Article is From Sep 21, 2019

''எந்த நாடும் எங்களை தாக்க நினைத்தால் போர்தான் வெடிக்கும்'' - எச்சரிக்கும் ஈரான்!!

சவூதி அரேபியாவில் எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரானே காரணம் என்று அமெரிக்காவும், சவூதியும் குற்றம் சாட்டி வருகின்றன. இதனை ஈரான் மறுக்கிறது.

Advertisement
உலகம் Edited by

ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

Tehran:

எந்த நாடும் தங்களை தாக்க நினைத்தால் போர்தான் வெடிக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. சவூதி எண்ணெய் வயல்கள் மீதான தாக்குதலுக்கு ஈரானே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

உலகில் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடுகளில் சவூதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமையன்று அராம்கோ எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது ஆளில்ல விமானங்களான ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் விளைவாக அங்கு உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்வை சந்தித்தது. 

இந்த ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனை ஈரான் மறுத்து வரும் நிலையில் அதன் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால், ஈரானியர்களுக்கு மருந்து, உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடும் பொருளாதாரப் பிரச்னையால் ஈரான் நாடு சிக்கல் தவித்துக் கொண்டிருக்கிறது. சவூதி - ஈரான் இடையே பதற்றம் நீடித்தால் ஈரான் மீது சவூதி மற்றும் அதன் ஆதரவு படைகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது. 

Advertisement

இந்த நிலையில், தங்கள் மீது எந்த நாடும் தாக்குதல் நடத்தினாலும் நேரடியாக போர் வெடிக்கும் என்று ஈரான் எச்சரிக்கை செய்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் ராணுவ தலைமை தளபதி  உசேன் சலாமி தலைநகர் டெஹ்ரானில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

எந்த நாடு எங்களை தாக்க நினைக்கிறதோ, அவர்கள் மீது நேரடியாக நாங்கள் போரைத் தொடுப்போம். அதற்கு விருப்பம் இருந்தால் எந்த நாடும் எங்களை தாக்கலாம். ஈரானுக்கு எதிராக போர் நடப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு ஈரானை தாக்க நினைப்பவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வார்கள் என நம்புகிறேன். 
இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Advertisement
Advertisement