This Article is From Nov 17, 2018

"கஷோக்கி கொலையில் சவுதி மன்னருக்கும் பங்குள்ளது" - குற்றம்சாட்டும் சிஐஏ

சவுதியிலிருந்து 15 பேர் கொண்ட குழு, அரசு விமானம் மூலம் அக்டோபரில் இஸ்தான்புல் அமீரகத்துக்கு சென்றது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ பத்திரிகையாளர் கஷோக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ பத்திரிகையாளர் கஷோக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய முடிவுக்கு வந்துள்ளது. சவுதி மன்னரான முகமது பின் சல்மானின் ஆணையின்படியே கஷோக்கி கொல்லப்பட்டார் என்பது உறுதி செய்துள்ளது. முன்னதாக அக்டோபர் 2ம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அமீரகத்துக்கு சென்ற கஷோக்கி, மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இவர் சவுதி மன்னரை பற்றி விமர்சித்து செய்தி வெளியிட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இது திட்டமிட்ட கொலை என்று ஏற்கெனவே கூறப்பட்ட நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக ஆவணங்கள் வெளியாகியுள்ளன. சவுதியிலிருந்து 15 பேர் கொண்ட குழு, அரசு விமானம் மூலம் அக்டோபரில் இஸ்தான்புல் அமீரகத்துக்கு சென்றது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அமீரகத்துக்கு கஷோக்கி வந்ததன் காரணம் ஒரு துருக்கி பெண்ணை மணப்பதற்காக, ஆவணங்களை பெற வந்தார் என்று கூறப்படுகிறது.

சிஐஏ விசாரணையில் சவுதி மன்னரின் சகோதரர் கலீத்க்கு கஷோக்கி தொலைபேசி மூலம் பேசிய அழைப்புகளை விசாரித்தது, இதில் கசோக்கி ஆவணங்களை பெற நேரில் வந்ததாகத் தெரியவந்துள்ளது.

பல கட்ட விசாரணைக்குப் பிறகு, கொலையில் மன்னருக்கு பெரும் பங்கு உள்ளது என்று இறுதி முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை நன்கு திட்டமிட்டு சவுதி செய்தள்ளது என்று சிஐஏ தெரிவிக்கிறது.

இந்த வழக்கில் 11பேர் மீது நேரடி குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.