This Article is From Jun 01, 2018

வோக் பத்திரிக்கையில் வெளிவந்த சவுதி இளவரசி புகைப்படம்: சர்ச்சை

வோக் அட்டைப்படத்தில் சவுதி அரசி கார் ஓட்டும் போல் வந்த புகை படத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது,  இதை தொடர்ந்து  பெண் ஆர்வலர்கள் கைது

வோக் பத்திரிக்கையில் வெளிவந்த சவுதி இளவரசி புகைப்படம்: சர்ச்சை

ஹைலைட்ஸ்

  • வோக் அட்டைப்படத்தில் சவூதி அரசி கார் ஓட்டும் போல் வந்த புகை படம்
  • "சவுதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நான் வரவேற்கிறேன்" - ஹய்ஃபா
  • இதுவரை 11 பெண் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
Dubai, United Arab Emirates: வோக் அட்டைப்படத்தில் சவுதி அரசி கார் ஓட்டும் போல் வந்த புகை படத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது,  இதை தொடர்ந்து  பெண் ஆர்வலர்கள் கைது. 

அரசி ஹைஃபா பின் அப்துல்லாஹ், கையில் லெதர் கிளவுஸ் அணிந்தும், ஹீல்ஸ் போட்டும் கார் ஓட்டுநர் இடத்தில் ஒக்காந்து இருக்கும் புகைப்படம் ஜூன் மாத வோக் பத்திரிக்கையின் அட்டை படத்தில் வெளியாகியுள்ளது. அத்துடன் சவூதி பெண்கள் மீதான ஓட்டுநர் தடையை நீக்கியுள்ளது என்ற தலைப்பையும் சூட்டி இருந்தனர். 

கன்சர்வேட்டிவ்வான சவுதி ராஜ்யத்தில் இருந்து பெண்களை விடுதலை செய்யும் சவுதி அரசர் மொஹமத் பின் சல்மானை புகழ்ந்து கட்டுரை ஒன்றையும் அத்துடன் வெளியிட்டது வோக் 

"சவுதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நான் வரவேற்கிறேன்" என வோக் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருந்தார் மறைந்த அரசர் அப்துல்லாவின் மகள் ஹய்ஃபா 

ஆனால் இந்த படம் வெளியானதையொட்டி இதுவரை 11 பெண் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் வெளியில் வந்துவிட்டனர், மற்றவர்களின் நிலை தெரியவில்லை. 

இளவரசியின் புகைப்படம் வெளியிட்டதை எதிர்த்து சவுதி மக்கள் டிவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
.