சில நபர்களால் நான் சித்தரிக்கப்படுகிறேன் என சவுராப் மதன் மிது வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.
Amritsar: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ரயில் பாதையில் நின்று தசரா கொண்டாட்டங்களை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது வேகமாக வந்த ரயில் மோதியது. இந்த விபத்தில் இதுவரை 61 பேர் உயிரிழந்ததுள்ளனர். மேலும் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து குற்றவாளி என சந்தேகிக்கும் நபர்கள் மீது ரயில்வே போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியை நடத்தியவர்களே இதற்கு முழு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியின் கவுன்சிலர் விஜய்மாதவன் மற்றும் அவரது மகன் சவுராப் மதன் மிதுனை போலீசார் தேடி வருகின்றனர். இருவரும் விபத்து நடந்த அன்றே தலைமறைவாக இருந்து வருகின்றனர். இதனிடையே கோபமடைந்த பொது மக்கள் சிலர் மதன் வீட்டினை கற்களால் தாக்கினர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்து வரும் சவுராப் மதன் மிது, இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விழா ஏற்பட்டுக்கான அனைத்து அனுமதிகளையும் பெற்று தான் விழா நடத்தினோம். இருப்பினும் சிலர் எங்களுக்கு எதிராக சதி செய்கின்றனர் என்றார்.
மேலும், இந்த கோர விபத்தினால், மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளேன். நான் எல்லோரையும் ஓர் இடத்தில் ஒன்றினைக்கவே தசரா விழாவினை ஏற்பாடு செய்தேன். இதற்காக அனைத்து அனுமதியையும் வாங்கியுள்ளேன். தீயணைப்பு துறையினர், காவல்துறையினர், நகராட்சி அதிகாரிகள் என அனைத்து நபர்களிடம் தெரிவித்துவிட்டேன்.
தசரா கொண்டாட்டங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது வேகமாக வந்த ரயில் மோதியதில் 61 பேர் உயிரிழந்ததுள்ளனர். நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாங்கள் விழாவிலை நிலத்திலே நடத்தினோம் தண்டவாளத்தில் அல்ல. ஆனால், சில மக்கள் தண்டவாளத்தில் நின்று விழாவை பார்த்துள்ளனர். அந்த நேரத்தில் ரயில் வந்துள்ளது. இது கடவுளின் செயல். இதில் என் தவறு என்ன உள்ளது? சில அதிகாரிகள் மற்றும் சிலர் எனக்கு எதிராக செயல்பட்டு பழிதீர்த்துக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் 7 முதல் 10 முறை ரயில் பாதையில் நிற்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தோம் என கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் நாங்கள் மக்களுக்கு ரயில் பாதையில் நிற்க வேண்டாம் என்று பலமுறை அறிவிப்பு விடுத்தோம் என்பதை மீண்டும் மீண்டும் தெரிவிக்கிறார். விபத்து நடந்த மாலையில் எடுக்கப்பட்ட வீடியோவில், விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவஜோத் கவுர் சித்துவை, வரவேற்று பேசும் போது தங்களை பார்க்க நூற்றுக்கணக்கான ரயில் செல்லும் ரயில் பாதைகளிலும் காத்திருந்து மக்கள் பார்க்கின்றனர் என்கிறார்.
மேலும், மேடம் அந்த மக்கள் ரயில் பாதையில் நிற்பது குறித்து கூட கவலை கொள்ளவில்லை. 5000 மக்கள் ரயில் பாதையில் தங்களை காண நிற்கின்றனர். 500 ரயில் சென்றாலும் அவர்கள் அங்கிருந்து அசைய மாட்டார்கள் என பெருமை கொள்கிறார்.
மிதுவும் அவரது தாயாருமான காங்கிரஸ் கவுன்சிலரும் கடந்த 3 நாட்களாக தலைமறைவாக இருந்து வருகின்றனர். இவர்கள் மீதான கோபத்தில் மக்கள் இவர்கள் வீடுகளை மீது கற்களை ஏறிந்து வீட்டின் ஜன்னல்களை உடைத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பஞ்சாப் போலீசார் அளித்துள்ள முதல் தகவல் அறிக்கையில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை.