Save All Sujith - 70 அடிக்கு சென்ற குழந்தையை சுற்றி மண் விழுந்ததால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Save All Sujith - திருச்சி (Trichy) மாவட்டம், மணப்பாறை (Manapparai) அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் (Borewell) 2 வயது குழந்தை சுஜித் (Sujith) தவறி விழுந்துள்ளான் (Child trapped). பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி சுமார் 22 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை சுஜித், 70 அடிக்கு கீழ் சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதலில் 30 அடியில் குழந்தை சிக்கியிருந்த நிலையில், கயிறு கட்டி குழந்தையை மீட்க முயற்சிக்கும் போது அது தோல்வியில் முடிந்தது. இதில், துரதிர்ஷடவசமாக குழந்தை 30 அடியில் இருந்து வேகமாக கீழே சென்று 70 அடிக்கு சென்று மாட்டிக்கொண்டது.
தொடர்ந்து, நேற்றிரவு குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் கையை அசைக்கும் காட்சிகள் வெளியாகி காண்போரை கலங்கச் செய்தன. சுஜித்தின் அசைவுகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, 70 அடிக்கு சென்ற குழந்தையை சுற்றி மண் விழுந்ததால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மண் மூடப்பட்டதால் ஆழ்துளை கிணற்றில் இருக்கும் குழந்தை சுஜித் அசைவின்றி காணப்படுவது கவலை அளிக்கின்றது.
இதைத்தொடர்ந்து, ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்க தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதிநவீன உபகரணங்களுடன் 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சுஜித் மீட்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பல பிரபலங்களும் நெட்டிசன்களும் தங்களது கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர். நடிகர் ஆதி, ‘கடவுகளே அவனுக்கு சக்தி கொடு!,' என்று பதிவிட்டு, ஒரு படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தை பல நெட்டிசன்களும் பகிர்ந்து, ‘சுஜித்திற்காக பிரார்த்திப்போம்,' என்று பதிவிட்டுள்ளனர்.
பல பிரபலங்களும் தொடர்ந்து தங்களது சமூக வலைதள பக்கங்களில், சுஜித் பற்றி கருத்து கூறி வருகின்றனர். அவற்றில் சில: