பாஜக ஆட்சி மன்றக்குழு கூட்டத்தின்போது தண்ணீர் சேகரிப்பு போட்டி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
New Delhi: தண்ணீர் சேகரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கிடையே போட்டி நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற விவகாரக்குழு அமைச்சர் பிரலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் மக்கள் தொகை, குறைந்து வரும் வனப்பகுதி உள்ளிட்டவை காரணமாக தண்ணீருக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறத.
இதற்காக நீர்சக்தி என்ற அமைச்சகம் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு அதன் அமைச்சராக கஜேந்திர சிங் செகாவத் இருந்து வருகிறார். இந்த நிலையில் மழை நீர் சேகரிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக மாநிலங்களுக்கிடையே போட்டி நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.
இதன்படி சிறப்பாக மழை நீர் சேகரிப்பையும், நீர் மேலாண்மையையும் மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு ஊடுதல் நிதி உதவியாக வழங்கப்படும்.
இதேபோன்று நாட்டில் உள்ள அனைவருக்கும் குடிநீரை உறுதி செய்வது தொடர்பாகவும் பாஜக ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் பேசப்பட்டது.