2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நீட் தேர்வில், 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் கலந்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் அப்படி தேர்வு எழுதுபவர்களுக்கு அட்மிஷன் கொடுப்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.
மருத்துவப் படிப்புகளில் பயில கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று நடைமுறை கொண்டுவரப்பட்டது.
2019-ல் நடைபெறவுள்ள நீட் தேர்வுகள் வரும் மே 5-ம் தேதி நடைபெறும். இதற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
தற்போது வரை நீட் தேர்வுகளை சி.பி.எஸ்.சி நடத்தி வந்தது. அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு நிறுவனம் நடத்தவுள்ளது.
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் போன்ற படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)