This Article is From Nov 23, 2018

சிறைச்சாலைகளின் பரிதாபகரமான நிலை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் பரிதாபகரமான நிலை குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது

சிறைச்சாலைகளின் பரிதாபகரமான நிலை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் பரிதாபகரமான நிலை குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

சிறைச்சாலைகளில் அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் மதன் பி.லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததது, திகார் சிறையில் உள்ள யுனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா மற்றும் அவரது சகோதரர் அஜெய் உள்ளிட்டோருக்கு சிறையில் டிவி, மினரல் வாட்டர் உட்பட பல்வேறு சொகுசு வசதிகள் வீடுகளில் இருப்பது போன்று அமைத்து தரப்பட்டுள்ளன என்று ஊடகங்களில் வெளிவந்ததை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது.

வசதி படைத்தவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன. சிறைச்சாலைகளில் தனி நிர்வாகம் நடக்கிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளுக்குச் சென்று பார்க்குமாறு அதிகாரிகளிடம் சொல்லுங்கள். சிறைச்சாலைகளில் குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதில்லை.

கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. கழிவுநீர் செல்வதற்கு வழியில்லை. சிறைச்சாலைகளின் நிலை பரிதாபகரமாக உள்ளது. சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களுக்கு உரிமைகள் இருக்கிறதா? அதிகாரிகளின் கண்களுக்கு அவர்கள் மனிதர்களாத் தெரிகிறார்களா? இல்லையா? எனத் தெரியவில்லை.

இதேபோல், சிறார் குற்றவாளிகளை அடைத்து வைக்கும் அனைத்து கூர்நோக்கு இல்லங்களிலும், அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதன் தற்போதைய நிலையை அரசு தரப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறினர்.

.