சேது சமுத்திர திட்டத்தால் ராமர் பாலம் சேதம் அடையும் என்று கூறி, இந்த திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2007-ல் திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
இதற்கிடையே, ராமர் பாலத்தை (Ramar Palam) தேசிய புராதான சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி வலியுறுத்தி வந்தார். இதுதொடர்பாக மத்திய அரசு பிரமாண பத்திரம் ஏதும் தாக்கல் செய்யாமல் உள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தை சுப்ரமணிய சாமி இன்று அணுகினார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஓய். சந்திரா சூட் ஆகியோர் முன்பு ஆஜரான அவர், ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க கோருவது தொடர்பாக மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக 10 ஆண்டுகள் அவகாசம் அளித்தும் அரசு பதில் சொல்லாமல் இருக்கிறது என்று கூறினார். இதனை ஏற்ற நீதிபதிகள் இன்னும் 10 நாட்கள் பொறுத்திருங்கள் என்று சுப்ரமணியசாமியிடம் பதில் அளித்தனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)