This Article is From Aug 16, 2018

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

முல்லை பெரியாறு அணையின் நீர் அளவை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று அணையின் பேரிடர் மேலாண்மை துணைக் குழுவுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

முல்லை பெரியாறு அணையின் நீர் அளவை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று அணையின் பேரிடர் மேலாண்மை துணைக் குழுவுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் நிலவும் மிக மோசமான மழைக் காரணமாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

நாளை காலை துணை குழு, மத்திய பேரிடர் மேலாண்மை குழுவுடனும், தமிழகம் மற்றும் கேரள மாநில தலைமைச் செயலாளர்களுடனும் அவசர சந்திப்பு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. நேரில் சந்திக்க இயலாத பட்சத்தில், வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் ஆலோசிக்கவும் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.

“அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும். நீரோட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்” என்றது உச்சநீதிமன்ற அமர்வு. ஆனால், தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. உள்வரும் நீரின் அளவு 12,000 கன அடிகளாகவும், வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5000 கன அடியாக இருப்பதாகவும் தமிழக அரசு கூறியது. ஆனால், உச்ச நீதிமன்றம் அதை ஏற்க மறுத்தது. இது பழைய விஷயங்களை பேசுவதற்கான நேரம் இல்லை. இப்போதையை இடரை நீக்குவது பற்றி பேச வேண்டும் என்றனர் நீதிபதிகள். மேலும், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அதே நேரம், மத்திய பேரிடர் மேலாண்மை கமிட்டியுடன், தமிழக, கேரள மாநிலங்கள் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.