நீலகிரியில் யானைகள் நடமாடும் வழித் தடத்தில் சொகுசு ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட் கட்டப்பட்டுள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சட்டத்துக்குப் புறம்பாக கட்டுமானங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை அடுத்து உச்ச நீதிமன்றம், யானைகள் நடமாடும் பாதையில் உள்ள 11 ரிசார்டுகளை 48 மணி நேரத்துக்குள் மூடச் சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நீலகிரியில் இருக்கும் மற்ற ரிசார்ட் மற்றும் உணவகங்களை, 24 மணி நேரத்துக்குள் முறையான ஆவவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்கச் சொல்லியுள்ளது.