This Article is From Jul 03, 2018

'ஏன் இன்னும் பணம் கொடுக்கவில்லை'- லதா ரஜினிகாந்தை துளைக்கும் உச்ச நீதிமன்றம்

விளம்பர நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்க வேண்டிய கடனை இன்னும் ஏன் கொடுக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்திடம் கேட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

Advertisement
தெற்கு Posted by (with inputs from NDTV)

விளம்பர நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்க வேண்டிய கடனை இன்னும் ஏன் கொடுக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்திடம் கேட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ‘ஆட் பீரோ விளம்பர நிறுவனத்திடமிருந்து ‘கோச்சடையான்’ படப்படிப்பின் போது பெற்ற கடனான 6.2 கோடி ரூபாயை திரும்ப கொடுக்கச் சொன்ன பிறகும் ஏன் இன்னும் லதா ரஜினிகாந்த் பணத்தைக் கொடுக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பியுள்ளது.

கோச்சடையான் படப்பிடிப்பின் போதே ஆட் பீரோ நிறுவனம், மீடியோ ஒன் நிறுவனம் ஆகியவற்றுடன் லதா ரஜினிகாந்துக்கு பண விவகாரம் தொடர்பாக பிரச்னை வந்துள்ளது. இதையடுத்து, ஆட் பீரோ நீதிமன்றத்துக்குச் சென்றது. நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. அப்போது, ‘கடனை இன்னும் 12 வாரங்களில் கொடுக்க வேண்டும்’ என்று கூறியது. ஆனால், பணம் இன்னும் கொடுக்கப்படவில்லை.

இது ஒரு புறமிருக்க, கோச்சடையான் படப்பிடிப்பின் போது ஆட் பீரோ, லதா ரஜினிகாந்துக்கு 10 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக குற்றம் சாட்டியது. இது தொடர்பாகவும் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் தொடுத்தது ஆட் பீரோ. 

ஆனால், ஆட் பீரோவுடன் எந்த வித தகவலும் சொல்லப்படாமல் மீடியா ஒன், கோச்சடையான் உரிமங்களை எரோஸ் நிறுவனத்துக்கு விற்றது.

இப்படிப்பட்ட சூழலில்தான் உச்ச நீதிமன்றம், ஜூலை 8, 2016 ஆம் ஆண்டு, ஆட் பீரோ வழக்கு குறித்து லதா ரஜினிகாந்துக்கு கேள்வி எழுப்பியது. 


 

Advertisement