Read in English
This Article is From Sep 26, 2018

அரசு துறையில் எஸ்.சி/எஸ்.டி பதவி உயர்வு குறித்தான வழக்கு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அரசு துறையில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு, பதவி உயர்வு அளிப்பது குறித்தான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்தது

Advertisement
இந்தியா

வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படாது: உச்ச நீதிமன்றம்

New Delhi:

அரசு துறையில் எஸ்.சி/எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு, பதவி உயர்வு அளிப்பது குறித்தான வழக்கு உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர், 2006 ஆம் ஆண்டு தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தார். வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து வழக்கின் தீர்ப்பில், ‘2006 ஆம் ஆண்டு வழங்கப்பட்டத் தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாது. வழக்கும் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படாது. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்கும் விஷயத்தில், அரசு அந்தப் பிரிவினர் எப்படி பின் தங்கியுள்ளனர் என்பது குறித்து முறையான தரவுகளை சேகரிக்க வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். 

Advertisement