This Article is From Sep 05, 2018

ரஃபேல் ஒப்பந்தத்துக்கு தடை கோரும் மனுவை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

ஷர்மா தனது மனுவில், ரஃபேல் ஒப்பந்தத்தில் சில முறைகேடுகள் இருப்பதால், அந்த ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்

ரஃபேல் ஒப்பந்தத்துக்கு தடை கோரும் மனுவை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
New Delhi:

ரஃபேல் போர் விமானங்களை வாங்க, இந்தியா - ஃபிரான்ஸ் இடையேயான ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கை அடுத்த வாரம் விசாரிக்க இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம் கன்வில்கர், டி.ஒய்.சந்திரசுத் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க, வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா வைத்த வாதத்தை ஏற்றுக் கொண்டனர்.

ஷர்மா தனது மனுவில், ரஃபேல் ஒப்பந்தத்தில் சில முறைகேடுகள் இருப்பதால், அந்த ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

.