This Article is From Oct 23, 2018

பட்டாசு வெடிப்பது குறித்து உச்ச நீதிமன்ற கட்டுப்பாடு: 5 முக்கிய தகவல்கள்

உச்ச நீதிமன்றம், ‘பண்டிகளைகளின் போது குறைந்த மாசு ஏற்படுத்தும், குறைந்த சத்தம் தரும் பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்பளித்துள்ளது

பட்டாசு வெடிப்பது குறித்து உச்ச நீதிமன்ற கட்டுப்பாடு: 5 முக்கிய தகவல்கள்

சரவெடிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது

New Delhi:

உச்ச நீதிமன்றம், ‘பண்டிகளைகளின் போது குறைந்த மாசு ஏற்படுத்தும், குறைந்த சத்தம் தரும் பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட வேண்டும்' என்று இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், ‘தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் தான், பட்டாசு வெடிக்க வேண்டும். அதேபோல கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இரவு 11:55 மணி முதல் 12:30 வரை பட்டாசு வெடிக்கலாம்' என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. உரிமம் வாங்கியுள்ள விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே பட்டாசு விற்கப்பட வேண்டும் என்றும், இணையம் வாயிலாக பட்டாசு விற்பனை செய்யப்படக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது.

தீர்ப்பில் கூறிய முக்கிய 5 விஷயங்கள்:

  1. குறைந்த சத்தம் தரும் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட வேண்டும்.
  2. சரவெடிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  3. உரிமம் வாங்கியுள்ள விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே பட்டாசு விற்கப்பட வேண்டும் 
  4. ஜூலை 2005 ஆம் ஆண்டு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சத்த அளவுள்ள பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்படும்.
  5. தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் தான், பட்டாசு வெடிக்க வேண்டும். அதேபோல கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இரவு 11:55 மணி முதல் 12:30 வரை பட்டாசு வெடிக்கலாம்.

.