Guntur, Andhra Pradesh: ஆந்திர மாநில குண்டூரில் அருகே இன்று காலை தனியார் பள்ளிப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 மாணவர்கள் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் குண்ட்டூர் மாவட்டத்தில் 52 பள்ளி குழந்தைகளுடன் பயணம் செய்த கிருஷ்ணவேனி டேலண்ட் பள்ளி வேன் பாலத்தின் மீது சென்ற போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணம் செய்த மாணவர்களில் 25 பேர் படுகாயமடைந்தனர், 3 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
விபத்தில் காயம் அடைந்துள்ள மானவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகாத நிலையில் பள்ளி பேருந்து ஓட்டுநர் குடித்து விட்டு வாகனத்தை ஓட்டியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
(With inputs from ANI)