This Article is From Sep 09, 2020

ஐந்து மாதங்களுக்கு பிறகு சீனியர் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க அனுமதி!

இப்போதைக்கு, 50 சதவீத கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கதாக பார்க்கப்படுகின்றது.

ஐந்து மாதங்களுக்கு பிறகு சீனியர் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க அனுமதி!

தற்போது 9-ம் வகுப்பு மற்றும் அதற்கு அடுத்த வகுப்பு மாணவர்கள் பள்ளி வர அனுமதி

New Delhi:

அன்லாக் நான்கு செயல்முறையின் ஒரு பகுதியாக பள்ளிகள் முதற்கட்டமாக செப்டம்பர் 21 முதல் திறக்க அனுமதிக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலக  அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில் தற்போது 9-ம் வகுப்பு மற்றும் அதற்கு அடுத்த வகுப்பு மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில் பள்ளிக்கு வர செப்.21 முதல் அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முழுமையாக பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்புகள் தற்போது இல்லையென்றாலும் கூட, இந்த அறிவிப்பானது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள், தங்கள் பெற்றோர்களிடமிருந்து அனுமதியை எழுத்துபூர்வமாக பெற்று வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு வரும் வேளையில் அவர்களுக்கான சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை பள்ளிககள் கட்டாயம் கடைப்பிடித்திருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

இப்போதைக்கு, 50 சதவீத கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கதாக பார்க்கப்படுகின்றது.

.