An illustration of the Megachirella wachtleri lizard in Northern Italy 240 million years ago
ஹைலைட்ஸ்
- பூமியின் உயிரினங்களில் அதிகமான எண்ணிக்கையில் இருப்பவை ஊர்வன
- இவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடந்து நடந்து வருகின்றன
- ஆராய்ச்சியில் 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான பல்லி இனம் கண்டுபிடிப்பு
நாம் வாழும் இந்த பூமி குறித்தும், அதில் நம்முடன் இணைந்து வாழும் உயிரினங்கள் குறித்தும் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த பூமியில் பாலூட்டி இனத்தைவிட எண்ணிக்கையில் அதிகாமாக இருப்பவை ஊர்வன இனங்கள்.
அதாவது பாம்பு, பல்லி போன்ற கால் இல்லாத புழு போன்ற ஊர்வன அனைத்தும் ஊர்வன பட்டியலில் வரும். முதுகு எழும்பு இல்லாத உயிரன பட்டியலில் இவற்றிற்கான இடம் பெரியது. இந்த பாம்புகள், மலைப்பாம்புகள், வீரியன்கள், உடும்புகள் எல்லாம் எங்கிருந்து வந்தவையாக இருக்கும் என பல நேரங்களில் வியந்திருப்போம்.
இவையெல்லாம் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பெர்மியன் காலத்தில் தோன்றிய உயிரினங்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால், தொல்பொருள் ஆய்வுகளின் அடிப்படையில் கிடைத்த பதின்மங்கள், அதைவிட 70 ஆண்டுகள் இளமையானவையாகவே இருக்கின்றன.
‘இந்தக் காலக்கட்டம் என்பது நமக்கும் டைனோசர்களுக்கும் இடையேயான காலத்தை விட பழமையானது. ஆனால், என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியவில்லை’ என இதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் டியாகோ சைமோஸ் கூறுகிறார். இவர் அல்பெர்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல் உயிரியளாலர் ஆவார்.
இந்த ஆய்வில், மெகாசிரெல்லா என்றதொரு பல்லி வகை உயிரனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 240 மில்லியன் ஆண்டுகள் பழமையான தொல் படிமத்திலிருந்த, இந்த மெகாசிரெல்லா பல்லி தான் பல்லிகளுக்கு எல்லாம் மூத்த பல்லி ‘தாய் பல்லி’ எனக் கூறப்படுகிறது. இப்பல்லி மீதான ஆராய்ச்சிதான் ஊர்வன இனம் எப்படி சிறியதலிருந்து பெரியவையாக உருமாறின என்பது குறித்த கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றன. அண்டார்டிகா கண்டனத்தைத் தவிர இதர கண்டங்களில் இவற்றின் வளர்ச்சிப் படிமம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த மற்றுமொரு தொல் உயிரியலாளர் இத்தாலியின் ட்ரெண்டோவில் உள்ள மியூஸ் பல்கலைக்கழகத்துக்கான ஒரு வீடியோ பதிவில், “இந்தக் கண்டுபிடிப்பு சிறந்ததொரு உதாரணமாக உள்ளது. பாம்பு மற்றும் பல்லி இன வகைகளின் தோற்றப் பெருக்கத்தைக் கண்டறிய உதவி புரிந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
இதுதொடர்பான கூடுதல் ஆராய்ச்சியை தற்போது டியாகோ சைமோஸ் மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய முனைவர் ஆராய்ச்சி படிப்பையே பல்லி மற்றும் பாம்பு இனங்களின் வாழ்ந்த மற்றும் வாழும் காலங்களை ஆராய்ச்சி செய்து வருகிறார்.
(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)