This Article is From Oct 29, 2018

தொகுதி பங்கீடு: பாஜக - ஐஜத கூட்டணியில் மோதலா..?

பிகாரில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளத்திற்கும், பாஜக-வுக்கும் இடையில் தொகுதி பங்கீடு நடந்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன

தொகுதி பங்கீடு: பாஜக - ஐஜத கூட்டணியில் மோதலா..?
Patna:

பிகாரில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளத்திற்கும், பாஜக-வுக்கும் இடையில் தொகுதி பங்கீடு நடந்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. இந்நிலையில் இது குறித்து கூட்டணி காட்சிகள் மவுனம் களைத்துள்ளன.

வரும் 2019 ஆம் ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக-வும் - ஐக்கிய ஜனதா தளமும், மாநிலத்தில் இருக்கும் 40 தொகுதிகளில் சமமான இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பிகாரின் எதிர்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வரி யாதவை, ஐஜத கூட்டணியில் இருக்கும் ஆர்.எல்.எஸ்.பி தலைவர் உபேந்திர குஷ்வாஹா சந்தித்தார். இதனால், பிகார் அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன.

மேலும் ஐஜத தொகுதி பங்கீட்டில் லோக் ஜனசக்தி கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து லோ.ஜ கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிராக் பஸ்வான், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறும் எண்ணம் இல்லை. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். தற்போதைக்கு வேறு கூட்டணி பற்றி நாங்கள் யோசிக்கவில்லை.

அதே நேரத்தல் சென்ற லோக்சபா தேர்தல் போன்று, இந்த முறையும் நாங்கள் 7 தொகுதிகளில் போட்டியிடுவோம். ஆனால், கூட்டணியில் இருக்கும் போது சில விஷயங்களை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்குவது தான் எங்களது முக்கிய நோக்கமாகும்' என்று கூறியுள்ளார்.

அதேபோல ஆர்.எல்.எஸ்.பி கட்சியின் துணைத் தலைரான பக்வான் சிங் குஷ்வாலா, ‘எங்களுக்குறள் எந்த மோதலும் இல்லை. இருக்கும் அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவோம். நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்குவோம்' என்று கூறியுள்ளார்.

.