This Article is From Dec 24, 2018

அமைச்சர் முன்னிலையில் அடி, உதை… அதிமுக-வில் கோஷ்டி மோதல்!

தூத்துக்குடியில் நடந்த அதிமுக கட்சிக் கூட்டத்தில், அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில், கட்சியின் இரு கோஷ்டிகள் மோதலில் ஈடுபட்டனர்

அமைச்சர் முன்னிலையில் அடி, உதை… அதிமுக-வில் கோஷ்டி மோதல்!

தூத்துக்குடியில் நடந்த அதிமுக கட்சிக் கூட்டத்தில், அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில், கட்சியின் இரு கோஷ்டிகள் மோதலில் ஈடுபட்டனர்.

விளாத்திக்குளத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தக் கூட்டத்தில், யார் முதலில் பேசுவது என்பது குறித்து உள்ளூர் கட்சி நிர்வாகிகளுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர், முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை பேச வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், இன்னொரு தரப்பினர் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூவின் ஆதரவாளர் பேச வேண்டும் என்று கோரியதாகவும் கூறப்படுகிறது.

இரு கோஷ்டிகளுக்கும் இடையில் முதலில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் கைகலப்பில் கட்சித் தொண்டர்கள் ஈடுபட்டனர். அமைச்சர் முன்னிலையில் நாற்காலிகள் பறக்கவிடப்பட்டன. கடம்பூர் ராஜூவுடன் பாதுகாப்பிற்கு வந்திருந்த போலீஸார் உட்பட சிலர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர். அந்த முயற்சி எந்தப் பலனையும் அளிக்காத நிலையில், 10 நிமிடங்களிலேயே கட்சிக் கூட்டம் முடித்து வைக்கப்பட்டது.

.