மீன்கள் இறந்து மிதந்ததால், டார்லிங் நதி வெள்ளை நிறத்தில் காணப்பட்டது.
ஹைலைட்ஸ்
- ஆயிரம் மீன்கள் வரும் நாட்களில் இறந்து மிதக்கும் என அதிகாரி தெரிவித்தார்
- இருக்கும் டார்லிங் நதியில் தான் இது நடந்துள்ளது
- கடுமையாக மாசடைந்த காரணத்தால் தான் இவ்வாறு பல ஆயிரம் மீன்கள் இறக்கிறது
Sydney: ஆஸ்திரேலியாவில் ஆயிரம் கணக்கான மீன்கள் இறந்து நதியில் மிதந்தது. இதனால், அந்த நதி வெள்ளை நிறத்தில் காணப்பட்டது.
நியூ சவுத் வெல்ஸ் மாகாணத்தில் இருக்கும் டார்லிங் நதியில் தான் இது நடந்துள்ளது. இதுப் போல், மேலும் பல ஆயிரம் மீன்கள் வரும் நாட்களில் இறந்து மிதக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கடும் வெயில் தாக்கியது. இதனால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறைவான தண்ணீர் அளவும் குறைவான ஆக்ஸிசன் அளவும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
பல கிலோ மீட்டர்கள் விரிந்து இருக்கும் இந்த டார்லிங் நதியானது, கடுமையாக மாசடைந்த காரணத்தால் தான் இவ்வாறு பல ஆயிரம் மீன்கள் இறந்து மிதக்கிறது என ஒரு தரப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.
.
இது போல் வரும் நாட்களிலும் பல மீ ன்கள் இறக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் கடும் வெயிலுக்கு பின் திடிரென வெப்பநிலை குறைந்ததால், நதியில் ஆக்ஸிசன் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் காலதாமதமாக துவங்கிய மழை காலத்தால் பல சுற்றுசுழல் பாதிப்புகளை ஆஸ்திரேலியா சந்தித்து வருகிறது.
சில இடங்களில் வரலாறு காணாத வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களும் விவசாயிகளும் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.