Read in English বাংলায় পড়ুন
This Article is From Feb 02, 2020

இரண்டாவது விமானம் மூலம் சீனாவில் இருந்து 323 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!!

நேற்றைய தினம் வுஹான் பகுதியில் சிக்கியிருந்த 324 இந்தியர்கள் ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக சிறப்பு விமானம் மூலம் அழைத்துவரப்பட்டனர்.

Advertisement
இந்தியா Posted by
New Delhi:

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோ வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, அங்கு வுஹான் பகுதியில் சிக்கியிருந்த இந்தியர்கள் இரண்டாவதாக சென்ற ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். 

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்வதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. சீனாவில் 9,000க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இதையடுத்து, சீனாவில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க இந்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக சிறப்பு விமானம் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுடனும் 5 மருத்துவர்கள் குழுவினருடன் சீனா பறந்தது. 

தொடர்ந்து, அங்கு வுஹான் பகுதியில் சிக்கியிருந்தவர்களில் 324 பேர் முதல் விமானம் மூலம் நேற்று காலை மீட்டு வரப்பட்டனர். சிக்கியிருந்தவர்களின் பெரும்பாலானோர் இந்திய மாணவர்கள் என்பது தெரியவந்தது. வுஹானில் இருந்து இந்தியா மீட்டு வரப்பட்டுள்ள இந்தியர்கள் 14 நாட்கள் டெல்லி மானேசரில் உள்ள மையங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, 300 மாணவர்கள் வரை அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த நோய் தொற்று ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான மருத்துவர்கள் குழு அவர்களை முழுமையாக கண்காணித்து வருகிறது. 

Advertisement

இதையடுத்து, அதே விமானி, மருத்துவர்கள் குழு இரண்டாவது கட்டமாக மீண்டும் சீனா சென்றது. பின்னர் அங்கு சிக்கியிருந்த 323 இந்தியர்களுடன் இன்று அதிகாலை 3.10 மணி அளவில் வுஹானில் இருந்து விமானம் புறப்பட்டது. தொடர்ந்து, காலை 9.40 மணி அளவில் டெல்லி வந்தடைந்தது. 

இதில், மாலத்தீவை சேர்ந்த 7 பேரும் மீட்டு வரப்பட்டுள்ளனர். இதற்காக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாஹி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், தூதர்கள் விக்ரம் மிஸ்ரி மற்றும் சுஞ்சய் சுதிர் மற்றும் அவரது குழுவினருக்கும் நன்றிகள தெரிவித்துக்கொள்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

அதே விமானத்தில் 7 மாலத்தீவை சேர்ந்தவர்களும் அழைத்து வரப்பட்டனர். 

விமானத்தில் பயணிக்கும் எங்கள் இரண்டு அதிகாரிகள் தீபக் பத்மகுமார் மற்றும் எம்.பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு சிறப்பு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். வுஹான் பகுதிக்கு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்த இருவருக்குமே அனைத்து பெருமையும் சேரும். அவர்கள் தங்களது பொது சேவைக்கான உண்மையான உணர்வையும் வெளிப்படுத்தியுள்ளனர். 

இரண்டாவது முறையாக இந்தியர்களை அழைத்து வரும்போது, 4 இந்தியர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு காய்ச்சல் இருந்ததன் காரணமாக அவர்கள் அழைத்துவரப்படவில்லை என மிஸ்ரி தெரிவித்துள்ளார். இதேபோல், முதல் விமானத்திலும் 6 பேர் அனுமதிக்கப்படவில்லை அவர்களுக்கும் காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. 

Advertisement
Advertisement