Read in English
This Article is From Aug 01, 2018

கர்நாடகாவுக்கு 2-வது தலைநகரமா..? - குமாரசாமி முக்கிய தகவல்

கர்நாடகாவின் மற்ற பகுதிகளை விட வடக்கு பகுதியில் வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு வெகு நாட்களாவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement
தெற்கு (with inputs from PTI)
Bengaluru:

கர்நாடகாவில், வட கர்நாடகாவை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி சில அமைப்புகள் போராடி வரும் நிலையில், மாநிலத்துக்கு இரண்டாவது தலைநகரம் அமைப்பது குறித்து பேசியுள்ளார் முதல்வர் குமாரசாமி.

குமாரசாமியின் மஜகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து கர்நாடகாவில் ஆட்சி அமைத்துள்ளன. குமாரசாமி தலைமையில் பதவியேற்ற அரசு, சமீபத்தில் தான் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தொடர்ந்து 49,000 கோடி ரூபாய் அளவிலான விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பட்ஜெட்டில் வட கர்நாடகத்துக்கு, மாநில அரசு துரோகம் இழைத்துவிட்டதாகவும், சட்டமன்றத்தில் போதுமான பிரதிநிகள் இல்லையென்றும் கூறி ‘தனி மாநில கோரிக்கை’ முன் வைத்து பிரச்னை செய்து வருகின்றன சில உள்ளூர் அமைப்புகள். நாளுக்கு நாள் இந்தப் பிரச்னையின் வீரியம் அதிகரித்து வருவதையொட்டி, அது குறித்து முக்கிய தகவல் ஒன்று சொல்லியுள்ளார் குமாரசாமி.

‘கர்நாடகத்துக்கு இரண்டாவது தலைநகரம் அமைப்பது குறித்து நான் 12 ஆண்டுகள் முன்பே பேசினேன். ஆனால், அடுத்தடுத்து வந்த அரசுகள் அதற்கு செவி மடுக்கவில்லை. இதனால்தான் பெலகாவி நகரத்தில் சட்டமன்றம் கட்டப்பட வேண்டும் என்றும் அங்கு ஆண்டுக்கு ஒரு கூட்டத் தொடர் நடத்த வேண்டும் என்று கூறினோம். ஆனால், இந்த விஷயத்தில் பாஜக தேவையில்லாமல் குழப்பம் விளைவித்து வருகிறது. இன்னும் 15 முதல் 20 நாட்களுக்குள் அது குறித்தான முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன். மேலும், மங்களூருவை பொருளாதார தலைநகரமாகவும் மாற்றும் திட்டத்தில் இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார் குமாரசாமி.

கடந்த 2006 ஆம் ஆண்டு குமாரசாமியின் மஜத, பாஜக-வுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. அப்போது, சட்டமன்றத்தில் பெலகாவியை இரண்டாவது தலைநகரமாக ஆக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த தீர்மானம் குறித்து அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

Advertisement

கர்நாடகாவின் மற்ற பகுதிகளை விட வடக்குப் பகுதியில் வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு வெகு நாட்களாவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement