This Article is From Apr 04, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 2வது உயிரிழப்பு!

'டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பிய விழுப்புரத்தைச் சேர்ந்த கோவிட்-19 பாசிட்டிவ் 51 வயது ஆண்...'

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 2வது உயிரிழப்பு!

கொரோனா காரணமாக, மதுரையைச் சேர்ந்த நபர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இதுவரை 411 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • முன்னதாக மதுரையைச் சேர்ந்த நபர் கொரோனாவால் உயிரிழந்தார்
  • தற்போது விழுப்புரத்தைச் சேர்ந்தவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மதுரையைச் சேர்ந்த நபர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பிய விழுப்புரத்தைச் சேர்ந்த கோவிட்-19 பாசிட்டிவ் 51 வயது ஆண், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். நேற்று இரவு (03.04.2020) மூச்சுத் திணறல் அதிகமாகி இன்று காலை 7.44 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்' என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் விராடிக்குப்பன் சாலையில் உள்ள இடுகாட்டில் வழக்கத்தை விட அதிக ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு புதைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
 

.