Read in English
This Article is From May 10, 2020

மாலத்தீவில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க விரைந்தது இரண்டாவது கப்பல்!

ரண்டாவது கடற்படை கப்பல் ஐ.என்.எஸ் மாகர் அங்கிருந்து 200க்கும் அதிகமான குடிமக்களை அழைத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
இந்தியா Posted by

கப்பலின் தனி பிரிவானது பயணிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் அனைத்துவிதமான போக்குவரத்தும் முற்றிலும் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு விமானங்களையும், கப்பல்களையும் அனுப்பி வைத்தது.  மொத்தம் 64 விமானங்கள் மே 7 முதல் மே 13ம் தேதி வரையில் இயக்கப்படுகின்றன. சுமார் 15 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வர வேண்டும் என்று வளைகுடா நாடுகளில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'வந்தே பாரத் மிஷன்' என்று இந்த மீட்பு நடவடிக்கைக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இந்தியக் கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் மாகர்(INS Magar) ஞாயிற்றுக்கிழமை மாலத்தீவினை அடைந்துள்ளது. முன்னதாக ஐ.என்.எஸ் ஜலாஷ்வா கப்பல் 698 பயணிகளோடு கொச்சியை அடைந்தது. இவ்வாறாக மக்களை கப்பல் மார்கமாக மீட்டு  கொண்டுவருவதற்கு "ஆபரேஷன் சமுத்ரா சேது" என்கிற திட்டம் இயற்றப்பட்டது.

இந்நிலையில் குறிப்பிட்ட இடைவெளியில் மாலத்தீவுக்கு சென்ற இரண்டாவது கடற்படை கப்பல் ஐ.என்.எஸ் மாகர் அங்கிருந்து 200க்கும் அதிகமான இந்திய குடிமக்களை அழைத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கப்பலின் தனி பிரிவானது பயணிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும் தனி பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. நெரிசலை தவிர்ப்பதற்காகவும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த கப்பல் மாலதீவுகளுக்கு புறப்படுவதற்கு முன்பே, திரும்பி வந்து தரையிறங்கும் போது தேவைப்படும் அனைத்து தளவாட, மருத்துவ மற்றும் நிர்வாக தயாரிப்புகளையும் செய்யப்பட்டிருந்தது. மேலும், பயணத்தின் போது, ​​இந்த பயணிகள் அனைவரும் சுகாதார அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வழங்கிய சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.

Advertisement
Advertisement