ஊழல் புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Lucknow: உத்தரப்பிரதேசத்தில் தலைமை செயலக ஊழியர்கள் 3 பேரை முதல்வர் யோகி ஆதித்யநாத் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். முன்னதாக இந்த 3 பேர் ஊழலில் ஈடுபட்டார்கள் என செய்தி சேனல் ஒன்று புலனாய்வு செய்து தகவல்களை வெளியிட்டது.
இந்த விவகாரம் பெரிதானதை தொடர்ந்து யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் விசாரணை நடத்தி 10 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.
டிவி சேனல் வெளியிட்டுள்ள தகவலின்படி தலைமை செயலக ஊழியர்கள் முக்கிய அமைச்சர்களின் உதவியாளர்களாக செயல்பட்டுள்ளனர். சில கான்ட்ராக்டுகளை முடிப்பதற்காக அவர்கள் லஞ்சம் பெறுவது தொடர்பான காட்சிகள் டிவி சேனல் செய்த புலனாய்வு செய்தியில் இடம்பெற்றுள்ளது.
இதில் உள்ள உண்மைத் தன்மை குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை. 3 பேரை பணி க்கம் செய்து விட்டு அரசு ஊழல் விவகாரத்தில் மென்போக்குடன் நடக்காது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.