This Article is From Jul 29, 2019

அத்திவரதர் தரிசனம்: கூட்ட நெரிசலைத் தடுக்க தமிழக அரசின் நடவடிக்கை!

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்பட்டு 48 நாட்கள் மட்டும் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படும்.

Advertisement
தமிழ்நாடு Written by

ஜூலை 1 ஆம் தேதி முதல் இதுவரை 38.5 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். 

காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதராஜ பெருமாள் கோயிலில், அத்திவரதரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்த வண்ணம் இருக்கின்றனர். கடந்த ஜூலை 18 ஆம் தேதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி  4 பேர் உயிரிழக்கும் அவலம் நடந்தது. இதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இவ்வளவு பேர் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை” என்று விளக்கம் கொடுத்தார். 

அப்படி இருந்தும் கடந்த ஞாயிற்றுக் கிழமை, கூட்ட நெரிசலால் 30 பேர் மயக்கமடைந்தனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டிருக்கும் நபர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துள்ளது தமிழக அரசு. 

காஞ்சி வரதராஜ பெருமாள் ஆலயத்தில் இருக்கும் அத்திவரதரின் 12 அடி உயர சிலை, கோயிலின் குளத்திற்குள் வைக்கப்பட்டிருக்கும். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த சிலை வெளியே எடுக்கப்பட்டு 48 நாட்கள் மட்டும் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படும். முன்னதாக கடந்த ஜூலை 2, 1979 ஆம் ஆண்டு, அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்பட்டது. 

Advertisement

இதைத் தொடர்ந்து ஜூலை 1 ஆம் தேதி, மீண்டும் அத்திவரதரை மக்கள் தரிசிக்க வெளியே வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை அத்திவரதர், வெளியில்தான் இருப்பார். பிறகு குளத்துக்கு அடியில் வைக்கப்படுவார். ஜூலை 1 ஆம் தேதி முதல் இதுவரை 38.5 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement